Nov 28, 2010

25

உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக தரவிறக்க அனுமதிக்கலாம்

  • Nov 28, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பலனை எதிர்பாரமல் எதை செய்யமுடியுமோ அதை செய்ய ஒரு போதும் நாட்களை தள்ளி போடாதீர்கள்.

    வணக்கம் நண்பர்களே நேற்றைய தினம் எனது மகனின் முதலாம் பிறந்த தினம் அதற்காக ஒரு பதிவு எழுதியிருந்தேன் சாதரணமாக சொந்த விஷயங்களை பதிவில் எழுதுவதோ அல்லது புகைப்படம் இனைப்பதோ எனக்கு விருப்பமில்லை ஆனாலும் அதையெல்லாம் கொஞ்சம் மாற்றி வைத்து விட்டு எனது மகனின் புகைப்படத்தையும் இனைத்திருந்தேன் அந்த பதிவிற்கு வந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு பதிவு செய்கிறேன்.

    இனி நாம் பார்க்கபோகும் பதிவை பற்றியதான விஷயத்திற்குள் செல்வோம் சாதரணமாக இது பலருக்கும் தெரிந்திருக்கும் அப்படி தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்காக தான் இந்த பதிவு. உங்களிடம் இருக்கும் ஏதாவது கோப்புகளை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது வேறு யாரிடமோ பகிர்ந்துகொள்ள ஏதாவது ஷேர்டு தளங்களில் அப்லோட் செய்து அந்த உரலை நமக்கு வேண்டியவர்களிடம் பகிர்ந்துகொள்வோம் அல்லது மின்னஞ்சல் செய்வோம் இப்படியாக நாம் செய்யும் போது நமக்கு காலவிரயம் இருக்கும் அதற்கு பதிலாக உங்கள் கணினியில் இருக்கும் கோப்புகளை எந்த தளத்திலும் அப்லோட் செய்யாமல் நேரடியாக நீங்கள் உங்கள் நண்பர்களை கோப்புகளை எடுக்க அனுமதிக்கலாம் அதற்கான வழிமுறைகளை இந்த பதிவின் வழியாக பார்க்கலாம்.

    இதன் வழியாக உங்கள் கணினியில் இருக்கும் எந்த கோப்பையும் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானலும் எடுக்கமுடியும் யாரையும் எடுக்க அனுமதிக்கலாம் ஆனால் என்ன இனைய வழியாய் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது கொஞ்சம் நேரம் அதிகமாகிறது அதாவது பத்து எம்பி அளவுள்ள கோப்பு தரவிறங்க 1 நிமிடம் ஆகிறது என்றால் இந்த வழியாய் நீங்கள் தரவிறக்கும் போது 1 ½ நிமிடம் வரை ஆகலாம் இது சரியான கணக்கீடு இல்லை ஒரு உதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறேன்.

    இனி Tonido மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவுங்கள் அளவு 14எம்பி இருக்கிறது உங்கள் கணினியில் நிறுவி முடித்ததும் கீழிருக்கும் விண்டோ திறக்கும் அதை சரியாக பூரிப்பித்து விடுங்கள் இன்ஸ்டால் செய்து முடித்ததும் டாஸ்க் பாரின் இடது பக்கம் பாருங்கள் மஞ்சல் நிறத்தில் ஒரு ஐகான் இருக்கிறதே அது இதற்குறியதுதான் இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் எவ்வளவு கோப்புகளை வேண்டுமானாலும் எளிதாக பகிர்ந்துகொள்ள முடியும்.



    இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Webshare என்பதை கிளிக்கினால் ஒரு பாப் அப் திறக்கும் அதில் நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் போல்டரை அல்லது கோப்பை பிரவுஸ் செய்து Add என்பதை கிளிக்கினால் போதும் அவ்வளவுதான்.



    நாம் இனைத்த கோப்பிற்கு உரல் URL வந்துவிடும் அதை நண்பர்களோடு அல்லது வலைத்தளத்தில் நீங்கள் இனைத்திருக்கும் தகவலை நேரடியாக உபயோகபடுத்த முடியும் உங்கள் நண்பர்கள் உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக கோப்புகளை எடுத்துக்கொள்வார்கள்.



    இப்படியாக இருக்கும் நீங்கள் உள் நுழைவதற்கான முகப்பு.



    இதில் இருந்து வெளிவர படத்திலிருப்பது போல Logout செய்துவிடுங்கள்.



    இதை முழுவதுமாக பயன்படுத்தினால் உங்களுக்கு புரிந்துவிடும் நான் ஒரு சிறு கோடு தான் போட்டுக்காட்டியிருக்கிறேன் அதை நேர்த்தி மிகுந்த சாலையாக மாற்றிக்கொள்வதில் உங்கள் பங்கும் இருக்கிறது. மேலும் நீங்கள் பகிர்ந்துள்ள கோப்புகள் எத்தனை முறை தரவிறக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் வழியாகவே அறியும் வசதி இருக்கிறது.

    இனி இந்த தகவலை பகிர்ந்துகொண்ட் தம்பி பிரபு அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு விஷயத்திற்குள் செல்லலாம். இதுவும் மேலே பார்த்தது போலதான் ஆனால் அளவை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் ஆனால் பயன்படுத்துவதற்கு எளிமையாய் தந்திருக்கிறார்கள்.

    இனி இந்த Dropbox மென்பொருளை கணினியில் தரவிறக்கி நிறுவுங்கள் எல்லாம் வழக்கமான முறைதான் ஆனால் நிறுவும் போதே உங்களை ரிஜிஸ்டர் செய்ய சொல்லும், நிறுவி முடித்ததும் கணினியின் டாஸ்க்பாரில் பாருங்கள் ஒரு அட்டைப்பெட்டியை திறந்து வைத்தது போல இருக்கும் இது தான் இதற்கான ஐகான் அப்படியே உள்ளே பாருங்கள் புதிதாக MY Dropbox என ஒரு போல்டர் வந்திருக்கும் இதன் வழியாக தான் இனி உங்கள் கோப்புகளை பகிர்ந்துகொள்ள போகிறீர்கள்.



    இதில் உள்ள மொத்த கோப்புகளை வேண்டுமானலும் பகிர்ந்துகொள்ளலாம் இல்லை ஏதாவது ஒரு கோப்பை மட்டும் நான் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன் என்றால் படத்தில் உள்ளது போல அந்த லிங்க் மட்டும் காப்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி விடுங்கள்.



    உங்கள் கணினியை விட்டு வெளியில் இருந்தால் Dropbox தளம் சென்று உங்கள் பயணர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்தால் போதும் உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் உங்கள் கைகளுக்கு வந்துவிடும்.



    மன்னிக்கவும் நண்பர்களே பதிவை குறித்தான விபரங்களை விரிவாக எழுதமுடியவில்லை நேரமின்மையே காரணம் இருந்தாலும் இதில் விரிவாக எழுதுவதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கு பார்த்தவுடனேயே நிச்சியம் புரிந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 27, 2010

    51

    ஆசிர்வாதங்களுக்காய் வேண்டி நிற்கிறோம்

  • Nov 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனிதன் ஒரு தலைமுறை வாழ்வன் ஆனால் அவனின் நல்ல குணங்களில் அவன் எடுத்த பெயர் தலைமுறைகள் உள்ளவரை வாழும்.

    வணக்கம் நண்பர்களே இன்று எங்கள் வாழ்வின் மிக உன்னதமான நாள் ஆம் எங்கள் நினைவு முடிச்சுகளுக்குள் பின்னிக்கிடக்கும் எங்கள் அன்பு மகன் ஸ்ரீராம் பிறந்த தினம் இந்த நேரத்தில் முகம் அறியா நட்புகளோடு ஆசிர்வாதம் வேண்டி யாசித்து நிற்கிறோம். நல்லவர்கள் அருகில் இல்லையென்றாலும் அவர்களின் வாழ்த்துகள் துனை நிற்கும் என பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம் அந்த வார்த்தையில் நம்பிக்கை வைத்து உங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.



    செல்ல மகன் எங்கள் செல்வ மகன்



    செல்ல மகனே செல்வ மகனே-எங்கள்
    சிந்தை முழுவதும் அன்பு மகனே...

    தவமிருந்து பெற்ற செல்வமும் நீதானே-எங்கள்
    தவத்தின் வலிமையும் நீதானே...

    விதைத்த விருட்சமும் நீதானே-எங்கள்
    அறுவடை பலனும் நீதானே...

    இருமுடி கட்டும் சரணமும் நீதானே-எங்கள்
    இதயத் துடிப்பின் ஓசையும் நீதானே...

    வரம் தந்த சாமியும் நீதானே-எங்கள்
    வரமாய் வந்தவனும் நீதானே...

    பூவின் மகரந்தமும் நீதானே-எங்கள்
    புண்ணகையில் வந்து விழும் கர்வமும் நீதானே...

    நம் வீட்டின் பொக்கிஷம் நீதானே-எங்கள்
    உள்ளத்தின் வசந்தமும் நீதானே...










    இந்த உலகத்தில் யாரும் எதுவாக வேண்டுமானாலும் ஆகியிருக்க முடியும் ஆனால் ஒரு தகப்பனாக, தாயாக யாரும் அவதாரம் பூசி விட முடியாது அதற்கு இறைவனின் வரம் வேண்டும் அந்த வரமாய் நீ வந்ததால் மட்டுமே நானும் உன் தாயும் பிறந்த முழுப்பயனையும் அடைந்திருக்கிறோம், எங்கள் உறவே நீ தானாட! எங்கள் செல்வ மகனே நீ நீண்ட வாழ்வும், மங்காத வளமும், குறைவில்லா கல்வியும் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள் வாழும் மட்டும் வாழ்விற்கு பின்னும் எங்கள் ஆசிர்வாதம் என்றும் உன்னோடு இருக்கும். இந்த சமுதாயத்தில் சிறந்த மனிதனாக,மனிதம் உள்ளவனாக சிறந்து வாழ எங்கள் வாழ்த்துகள்.

    அன்புடன்
    அப்பா, அம்மா

    இனி ஒரு குட்டி விஷயத்தை பார்க்கலாம் பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் முதல் குழந்தைக்கும் கடைசி குழந்தைக்கும் மிகுந்த செல்வாக்கும் அவர்கள் மேல் கொஞ்சம் அலாதியான பிரியமும் பெற்றவர்களுக்கு இருக்கும் அதற்கு என்ன காரணம் இருக்குமென்று என்னைப்போன்ற ஒரு அண்ணனிடம் பேசினேன் அப்பொழுது அவர் ஒரு கருத்தை சொன்னார் அதாவது முதல் குழந்தை பிறக்கும் போது தன் ஆண்மையை நிருபித்த சந்ததி என்பதால் முதல் குழந்தை மேல் அதிக பாசம் இருக்குமாம் அடுத்தபடியாக பெண்ணை பொருத்தவரை முழுமையான மனுஷியாகிறால் அதாவது திருமணம் முடிந்து குழந்தை இல்லையென்றால் சமுதாயத்தின் பேச்சு வழக்குகள் உங்களுக்கு தெரியும் தானே. இனி கடைசிக்குழந்தையை பொருத்தவரை ஒரு ஆண் பெண்ணும் இப்பவும் எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக கருதுவதால் அந்த கடைசி குழந்தையின் மேலும் அதிகம் பாசம் இருக்குமாம் இப்போதெல்லாம் இந்த பிரச்சினை இல்லை இரண்டு குழந்தைகள் தானே பெற்றுக்கொள்கிறார்கள்.

    குறிப்பு ஓரிரு நிமிடம் நீங்கள் செய்யும் செலவு எங்கள் அன்பு மகனின் வழித்துனையாய் வாழ்வு முழுக்க உங்கள் ஆசிர்வாதம் கூடச்செல்லும்.
    Read more...

    Nov 24, 2010

    21

    கணக்குக்குள்ளே ஒரு கணக்கு (தசாமிசம்-decimal இருமம்-Binary)

  • Nov 24, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: காத்துக் கொண்டிருப்பவனுக்கு காலம் ஒவ்வொரு கதவையும் திறக்கிறது.

    வணக்கம் நண்பர்களே இதை பற்றி நான் ஏற்கனவே மதிப்பிற்குறிய பிகேபி தளத்தில் பகிர்ந்திருக்கிறேன் இன்று மீண்டும் அதே பகிர்வைத்தான் என் வலைத்தளம் வழியாக பகிர்ந்துகொள்ள போகிறேன் நம் தளத்தில் வரும் வழக்கமான பதிவுகள் போல கொஞ்சம் எளிமையில்லாமல் இருக்கலாம் இதை எப்படி இன்னும் எளிமைபடுத்துவது யோசித்து இறுதியில் முடியாமல் விட்டுவிட்டேன். இருந்தாலும் என் அருமை நண்பர்களுக்கு வாசகர்களுக்கு நிச்சியம் புரியுமென நம்புகிறேன் பதிவை ஓரிரு முறை நிதானமாக வாசித்து பாருங்கள் இதை அப்படியே செயல்படுத்தி பாருங்கள் உங்களுக்கு புரியும் உங்களால் முடியும்.

    நாம் ஒரு கணிப்பான் (கால்குலேட்டர்) வழியாக 27 + 12 என அடித்து கொடுத்தால் அடுத்த நொடியில் 39 என வந்துவிடும் ஆனால் இந்த விடையை சொல்லும் முன் கணிப்பான் அல்லது கணிணி என்ன செய்கிறது என பார்ப்போம்.

    இனி தசாமிசம்(decimal) இருமம் (Binary) எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்க்கலாம் நாம் கொடுக்கும் பதின்மம்(decimal) எண்கள் இருமமாக (Binary) மாற்றப்பட்டு பின்னர்தான் கணக்கிடப்படுகிறது.

    முதலில் பதின்மம்(decimal) எப்படி இருமம் (Binary) மாற்றப்படுகிறது என் பார்க்கலாம். உதாரணத்திற்கு 29 என்ற எண்னை எடுத்துக்கொள்ளலாம்.

    29÷2=14 – 1
    14÷2=7 – 0
    7÷2=3 – 1
    3÷2=1 – 1
    1÷2=0 – 1

    29 என்பதன் இருமம் 10111
    29 - 11101

    அதாவது 29÷2=14.5 என வரும் ஆனால் நீங்கள் 14.5 என்ற எண்ணில அடுத்த குறைந்த முழுமையான எண் 14 என்பதை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் மீதமுள்ள .5 என்பதை நீங்கள் 1 என எடுத்துக் கொள்ளவும் அதேபோல் 1÷2=0 – 1 ஒன்றிலிருந்து 2 வகுபடமுடியாது எனவே அதற்கான விடை 0 தான் ஆனால் நான் மேலே சொன்னபடி -1 என்பதை முழு எண்ணாக கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மேலே உள்ள கணக்கை பார்த்தால் புரியும் இறுதியில் நாம் 27 என்பது இருமமாக மாற்றினால் 27 என்பது 11101 என கிடைக்கும் இந்த 10111 என்பதை வலது பக்கத்தில் இருந்து எண்களை மாற்றி எழுத வேண்டும்.

    10111 என்பதை 11101 என எழுதவேண்டும் இனி தாங்கள் செய்தது சரிதான என தெரிந்து கொள்ள கணிணியில் உள்ள கணிப்பானை (கால்குலேட்டர்) திறந்து அதில் இருமம் Binary என்பதை தேர்ந்தெடுத்து 11101 என அடித்து பதின்மம்(decimal) என்பதை தேர்ந்தெடுங்கள் இப்பொழுது பதின்மமாக மாற்றப்பட்ட எண் 29 என இருக்கும்.

    மீண்டும் உதாரணத்திற்கு 12 என்ற எண்னை எடுத்துக்கொள்ளலாம்.

    12÷2=6 – 0
    6÷2=3 – 0
    3÷2=1 – 1
    1÷2=0 – 1
    12- 0011

    விடை : 1100

    இனி இருமம் (Binary) எண்னை எப்படி பதின்மமாக (decimal) மாற்றுவதை பார்க்கலாம்.மேலே குறிப்பட்டுள்ள படி 29 தசாம்சம்- 11101 இருமம் எண்ணாக மாற்றப்பட்டது இனி அப்படி மாற்றப்பட்ட எண் அதாவது இருமம் 11101 என்பது எப்படி பதின்மமாக 29 என வருகிறது என பார்க்கலாம்

    1 1 1 0 1 (இது இருமம் எண்)

    2(4) 2(3) 2(2) 2(1) 2(0) (ஒவ்வொரு எண்ணின் கீழ் இது போல எழுதிக்கொள்ளுங்கள் எத்தனை எண்கள் இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல பெருக்கும் முறையில எண்களை கூட்டிக்கொண்டே செல்லவும் 1 ,2,3,4, எழுதியது போல அடுத்தடுத்து வரும் எண்களுக்கு 5,6,7 என கூட்டிச்செல்லவும்) 16 8 4 2 1 (இதை பொருத்தவரை 2(0)பெருக்கினால் 0 வரும் ஆனால் இதில் மேலே குறிப்பிட்டுள்ளபடி 0 என்பதை 1 என மாற்றிகொள்ளவும் அடுத்து 2(1) என்பது 2 , 2(2) என்பது 4 , என பெருக்கி எழுதவும்)

    இப்பொழுது மூன்று வரிசைகள் இருக்கின்றன முதல் வரிசை இருமம் எண் இரண்டாவது வரிசை இருமம் சூத்திரப்படி நாம் எழுதியது அடுத்து மூன்றாவது வரிசை இரண்டாவது வரிசையின் சூத்திரப்படி பெருக்கி வரும் தொகை நான்காவது வரிசையை பாருங்கள் இதில் நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் முதல் வரிசையில் உள்ள இருமம் எண்ணில் எந்த இடத்தில் 1 என இருக்கிறதோ அதற்கு கீழாக உள்ள மூன்றாவது வரிசையில் எந்த எண் இருக்கிறதோ அதை எழுதவும் 0 என எங்கெல்லாம் வருகிறதோ அவை இருக்குமிடத்தின் கீழ் உள்ள மூன்றாவது வரிசையில் உள்ள எண்ணை கணக்கில் எடுத்துகொள்ளவேண்டியது இல்லை.

    மீண்டும் உதாரணத்திற்கு பதின்மம் Decimal 12 என்ற எண் இருமம் Binary 1100 ஆக மாற்றப்பட்டது இனி Binary 1100 என்பதை Decimal எண்ணாக மாற்றலாம்.

    1 1 0 0
    2(3) 2(2) 2(1) 2(0)
    8 4 2 1

    விடை : 8 + 4 = 12

    இனி இப்படி சோதனை செய்து பாருங்கள்

    29 – 12 = 17

    29ன் இருமம் 11101 – 12ன் இருமம் 1100 என கணிப்பான் (கால்குலேட்டர்) வழியாக இருமம் தேர்வு செய்து கழித்து பின்னர் அந்த எண்ணை (decimal) பதின்மமாக மாற்றிப்பார்க்கவும்.

    கணிணியில் 0 மற்றும் 1 என்பது இல்லையென்றால் கணிணியே இல்லையென்று சொல்லலாம் மேலை பார்த்தாலே தெரிந்திருக்கும் 0 மற்றும் 1 என்பதே கணிணியில் பிரதானம் இதெல்லாம் அவசியம் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை தெரிந்துகொள்வதில் தவறில்லை.

    நண்பர்களே இதைப்பற்றியெல்லாம் எழுதுவதால் நான் கணித அறிவு இருப்பவன் என எண்ண வேண்டாம் மேலும் இது உங்களுக்கு புது அனுபவமாக இருக்குமென்று நம்புகிறேன் இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம். எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 23, 2010

    24

    விமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி

  • Nov 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்பாக ஒத்துக்கொள்.

    வணக்கம் நண்பர்களே நம் வலைத்தளத்திற்கு பல நாடுகளில் இருந்தும் வருகிறார்கள் அப்படி வருபவர்களுக்கும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்கிறவர்களுக்கும் இந்தியாவுக்குள்ளே விமான போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு நிச்சியம் உதவும் இது முன்னமே உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் ஆனாலும் தெரியாதவர்களும் இருக்ககூடுமே அதனால் தான் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன்.

    முதலாவதாக YATRA இனையதளம் பற்றி பார்க்கலாம் இது இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளை தேடலாம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு தேடமுடியாது அதாவது From என்பது இந்தியா அல்லது இந்தியாவிற்குள் உள்ள விமான நிலையமாக இருக்கவேண்டும் இருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் .இந்தியாவின் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை

    Yatra தளம் செல்ல கீழிருக்கும் படத்தை கிளிக்கவும்



    இரண்டாவதாக MAKE MY TRIP, TRAVEL .TRAVELOCITY ,CLEAR TRIP, BARGAIN TRAVEL, SKYSCANNER, CHEAPOAIR இந்த இனையதளங்கள் வழியாக இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளையும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவிற்குள் இருக்கும் விமான சர்வீஸ்களையும் இன்னும் பிற வெளிநாடுகளுக்கான விமான சர்வீஸ்களையும் எளிதாக தேடமுடியும். இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் இதுவும் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை.

    சம்பந்தபட்ட தளங்களுக்கு செல்ல அந்தந்த படத்தை கிளிக்குங்கள்















    நண்பர்களை நீங்கள் விமாணப்பயணம் மேற்கொள்ளும் முன் நேரடியாக நீங்கள் டிக்கெட் எடுக்க விரும்பும் விமாணத்தின் இனையதளத்திற்கு சென்று தேடினால் அவர்களின் விமானத்திற்கான தகவல்கள் கிடைக்கும் நான் மேலே கொடுத்துள்ள தளங்களின் வாயிலாக தேடினால் நீங்கள் தேடும் தேதியில் எந்ததெந்த விமாணங்கள் அந்த வழியில் செல்கிறது அதன் விலை விபரம், நேரம் இன்ன பிற தகவல்களை ஓரே நேரத்தில் கண்டுபிடித்து விடலாம ஆனால் நீங்கள் பதிவு செய்ய விரும்பினால் நீங்கள் செல்லவிரும்பும் விமாணத்தில் இனையதளத்திற்கே சென்று டிக்கெட் எடுக்கவும் அல்லாது இவர்களின் தளம் வழியாக டிக்கெட் எடுத்தால் ஒரு டிக்கெட்டிற்கு சுமாராக 500 ரூபாய் வரை அதிகமாக இருக்கும் அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம் வெளி நாட்டில் இருப்பவர்கள் இதில் காண்பிக்கும் தொகையை தங்கள் நாட்டின் நாணயமதிப்பை கன்வெர்ட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் கடன் அட்டை இருந்தால் இதையே கூட உங்கள் பகுதி நேர தொழிலாக செய்யலாம் விருப்பமிருந்தால் மட்டும்.

    நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமென்று நம்புகிறேன் இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 21, 2010

    32

    ஜிமெயிலில் ஓடும் கையெழுத்து

  • Nov 21, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: சட்டம் ஈக்களை பிடிக்கிறது குளவிகளை பறந்து போகவிடுகிறது.

    வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் நேரடியாக உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டாலும் நண்பர்களின் மின்னஞ்சல்களில் கண்டிருப்பீர்கள் ஆனால் சில நேரம் கேட்பதற்கு தயக்கமாய் இருந்திருக்கலாம் சாதரணமாக மின்னஞ்சலில் நமது கையெழுத்துடன் ஏதாவது படம் இனைக்கும் வசதி இருக்கிறது ஆனால் முன்பு இந்த வசதி இல்லை அந்த நேரத்தில் நான் எழுதிய ஜிமெயிலில் HTML கையெழுத்து பதிவு ஆனால் அது யாருக்குமே அந்த நேரத்தில் பெரிதாய் பயன்படவில்லை கொஞ்சம் வருத்தமாய் தான் இருந்தது ஆனால் நாம் இப்போது பார்க்கபோவது உங்களுடைய பெயரை GIF இமேஜாக மாற்றி உங்கள் மின்னஞ்சல் கையெழுத்து பதிவில் எப்படி இனைப்பது என்பதை பற்றித்தான் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் ஒருவேளை நான் சொல்ல வருவது சரியான கோர்வையாய் கூட இல்லாமல் இருக்கலாம் அதற்கு தான் படத்தையும் கீழே இனைத்துள்ளேன் பாருங்கள் புரியும்.

    இந்த பதிவை எழுத உதவிய தம்பி பிரபாகரனுக்கு நன்றி.

    Sriram G

    சரி இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம் இந்த வசதி இரண்டு தளங்களில் கிடைக்கின்றன ஆனால் நீங்கள் GIF-MANIA பயன்படுத்துங்கள் வசதிகள் சிறப்பாக இருக்கிறது மற்றொரு தளம் 123PIMPION இருக்கிறது இரண்டில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதையே பயன்படுத்துங்கள் ஆனால் நான் இதற்காக எடுத்துக்கொண்டது GIF-MANIA அதனால் பதிவும் இதை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறேன்.

    நீங்கள் தளம் சென்றதும் இப்படியாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.



    நீங்கள் ஓக்கே கொடுத்ததும் இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் நீங்கள் உருவாக்கிய GIF இமேஜை நேரடியாக கணினியில் தரவிறக்கலாம் அல்லது மின்னஞ்சலில் வரவைக்கலாம் இரண்டும் ஒன்றுதான் நீங்கள் நேரடியாகவே தரவிறக்குங்கள் மின்னஞ்சல் திறக்கும் நேரம் மிச்சமாகும்.



    இனி நீங்கள் அடுத்ததாக ONLINE-IMAGE-EDITOR சென்று இமேஜே அப்லோட் செய்து தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் அதற்கான வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.









    சரி இதுவரை எல்லாம் சரியாய் செய்துவிட்டீர்கள் அடுத்து நாம் செய்யவேண்டியது நாம் உருவாக்கிய இமேஜை ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்து அதன் முகவரியை எடுக்கவேண்டும் இதற்கும் இரண்டு தளங்கள் பரிந்துரை செய்கிறேன் PHOTOBUCKET மற்றும் IMAGESHACK இதில் ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்துவிடுங்கள் நான் PHOTOBUCKET தளத்தில் அப்லோட் செய்கிறேன், அப்லோடு செய்து முடிந்ததும் Direct Link என்பதன் நேராக இருக்கும் லிங்க் காப்பி எடுத்துவைத்துக்கொள்ளவும் இதைத்தான் இனி நாம் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் இனைக்க போகிறோம் இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்துகிறேன் இதில் இருக்கும் HTML லிங்க் காப்பி எடுத்து நேரடியாக GIF இமேஜை பதிவில் இனைக்கலாம் அப்படி இனைக்கும் போது நீங்கள் அப்லோடு செய்த தளத்தின் முகவரி இருக்கும் அதை நீக்கவில்லையென்றால் படத்தை கிளிக்கும் போது அவர்கள் தளத்திற்கு கொண்டு செல்லும் அதற்கு பதிலாக அவர்களின் தள முகவரியை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக உங்கள் தளமுகவரியையோ அல்லது பேவரிட் தள முகவரியையோ கொடுக்கலாம்.



    இனி நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து வலது பக்க மேல் மூலையில் இருக்கும் Settings என்பதை திறந்து முதலாவதாக இருக்கு General டேப்பில் கீழே பாருங்கள் Signature:என இருக்கும் அங்கு சென்று படம் இனைப்பதற்கான இடத்தை நான் கீழிருக்கும் படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதை கிளிக்கி நீங்கள் முன்னதாகவே காப்பி எடுத்து வைத்திருந்த URL-லை இங்கே ஒட்டி விடுங்கள் ஓக்கே கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான். இனி உங்கள் மின்னஞ்சலில் கம்போஸ் செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.



    மேலும் நான் மேலே குறிப்பிட்ட ஜிமெயிலில் HTML கையெழுத்து பதிவில் இருக்கும் ஆட் ஆன் மற்றும் இந்த ஒடும் கையெழுத்து இரண்டையும் இனைத்து இன்னும் சில வசதிகளை உங்கள் மின்னஞ்சலில் சேர்க்கமுடியும் பதிவின் நீளம் கருதி நிறைவு செய்கிறேன் இனி வரும் சந்தேகங்களை கருத்துரையில் பகிர்வோம். இந்த மாதிரியான முறைகளை அலுவலக மின்னஞ்சல் அனுப்பும் நேரத்தில் பயன்படுத்தாதீர்கள்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 19, 2010

    40

    காணாமல் போன டெஸ்க்டாப் ஐகான்

  • Nov 19, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: இறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார் ஆனால் இறுதியில் தண்டிக்கிறார்.

    வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் கணினி உபயோகிப்பவர்களில் பலருக்கும் இந்த அனுபவம் நிச்சியம் ஏற்ப்பட்டிருக்கும் அதாவது நாம் கணினி வேகம் குறைந்ததாக இருந்து நாம் கணினியில் தொடர்ச்சியாக கட்டளைகள் கொடுப்போமேயானால் நிச்சியம் கணினி ஸ்தம்பித்துவிடும் அந்த நேரத்தில் அதை சரி செய்வதற்காக நாம் திறக்க நினைக்கும் பைல்கலை மீண்டும் மூட நினைத்தாலும் முடிவதில்லை சில நேரங்களில் எல்லா பைல்களும் காணமல் போய் வெறும் டெஸ்க்டாப் மட்டுமே தெரியும் அந்த மாதிரியான நேரத்தில் உங்களால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்வதை தவிர வேறு வழியிருக்காது. ஒரு வேளை உங்கள் கணினியில் ரீ ஸ்டார்ட் பட்டன் இல்லை அதாவது கணினியில் அந்த பட்டன் இயங்காத நிலை என்று நினைத்துக்கொள்ளுங்களேன் இந்த நேரத்தில் நீங்கள் பவர் பட்டனை அழுத்தி பிடித்தாலும் சில நேரஙகளில் கணினியை அணைக்க முடிவதில்லை அதற்கு ஓரே வழி மொத்தமாக பவரை அனைப்பது தான். நாம் பதிவில் பார்க்க போவது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படி நாம் திறந்திருக்கும் பைல்களை சேமிப்பது அல்லது மூடுவது என்பதை பற்றித்தான்.

    கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாகத்தான் இருக்கும் அதில் கவணித்தீர்களா டாஸ்க் பார் காணாமல் போயிருக்கும்.



    இனி இதற்கான தீர்வை பார்க்கலாம் உங்கள் கீபோர்டில் Ctrl+Alt+Del அல்லது Crtl+Shift+Esc அழுத்தினால் இப்போது டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் அதில் Applications டேப் திறந்து பாருங்கள் தற்போது உங்கள் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் பைல்களை காணலாம் அதில் நீங்க்ள் எலியல் வலது கிளிக்கினால் வரும் மெனுவில் Bring to front என்பதை தெரிவு செய்தால் அந்த பைலை கணினியின் முகப்புக்கு கொண்டு வந்துவிடலாம் இல்லை நீங்கள் திறந்திருக்கும் அந்த பைலை மூடி விட நினைத்தால் End Task என்பதை கிளிக்குவதன் மூலம் இயங்கிகொண்டிருக்கும் பைல்களின் இயக்கத்தை நிறுத்திவிட முடியும். அல்லது கணினியை நீங்கள் ரீ ஸ்டார்ட் செய்ய விரும்பினால் மேலிருக்கும் Shut Down என்பதை திறப்பதன் மூலம் Restart செய்துவிட முடியும்.



    கணினியில் டாஸ்க் மேனேஜர் என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம் இதன் வழியாகவே ஓரளவிற்கு கணினியில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் நம் கணினியில் ஏதாவது பிழைச்செய்திகள் அல்லது வைரஸ் இருப்பது போல உணர்ந்தாலும் இந்த டாஸ்க் மேனேஜர் வழியாக கண்டுபிடிக்க முடியும் . நம் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் நேரம் ஏதாவது ஹைடன் இயங்கினால் அதையும் காணமுடியும் இதன் வழியாகவே பைல்களை திறக்க முடியும் இப்படி இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது எல்லாமே உங்கள் கணினியில் உள்ள விஷயம் தான் மெதுவாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 18, 2010

    15

    பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம்

  • Nov 18, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: விவேகத்தையும் தன் விருப்பதிற்கேற்ப இணங்க வைப்பது பாசம்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும் இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.

    இந்த இசையை பொறுத்தவரை மொழிகள் ஒரு தடையில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு பல நாட்களுக்கு முன்பாக நான் நீங்களும் இசையோடு பாடலாம் என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நிறைய நண்பர்களுக்கு அந்த பதிவு ஒரு அனுபவமாக இருந்திருக்கும் அந்த பதிவிலோ உங்களால் இசையமைக்க முடியாது ஆனால் இந்த பதிவில் இருக்கும் மென்பொருள் வழியாக உங்களால் இசையமைக்கவும் முடியும்.

    முதலாவதாக Easy Music Composer வேண்டுமானால் உங்கள் கணினியில் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு இலவச தொகுப்பு என்பதால் நான்கு கட்டைகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை.



    அடுத்ததாக Magix Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள். இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்



    மூன்றாவதாக Encore Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள் ஆனால் எனக்கு தான் இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்னைப்பொறுத்தவரை இசையின் அளவுகோல் என்பது என் மனதிற்கு பிடித்தால் ரசிப்பேன் மற்றபடி அதில் உள்ள ஸ்வரம் , லயம் இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்.



    நண்பர்களே இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யதெரியவில்லையென்றால் அவசியம் கேளுங்கள் ஆனால் தயவுசெய்து இதை உபயோகிப்பது எப்படி என கேட்டு விடாதீர்கள் எனக்கும் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 17, 2010

    20

    அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் (Advanced System Care)

  • Nov 17, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குணங்களில் குறைகளுடையவனே.

    வணக்கம் நண்பர்களே இதைப் பற்றி உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்கள் இருக்ககூடும் அவர்களுக்கு இந்த தகவல் சென்றடையும் நோக்கமாகவே இந்த பதிவை எழுதுகிறேன் சாதரணமாக நம் கணினிகளில் ஒரு ஆண்டிவைரஸ் மற்றும் இன்னும் சில வகையான மென்பொருள்களை அவசியம் நிறுவி வைத்திருப்போம் நாம் பார்க்க போகும் இந்த மென்பொருள் கணினியில் இருந்தால் நல்லதே அதற்காக நிறுவ வேண்டும் என்கிற கட்டாயமில்லை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் மனதிற்கு கணினியில் இருந்தால் சிறப்பென்று நினைத்தால் அவசியம் நிறுவி விடுங்கள்.

    இந்த மென்பொருளில் என்னவிதமான வசதிகள் இனைக்கப்பட்டிருக்கிறது எனபதை நீங்கள் அறியும் வகையில் படங்களை இனைத்திருக்கிறேன் கீழே பாருங்கள்.

    இதன் வழியாக உங்கள் கணினியை தானகவே டீபிராக்மென்ட் செய்யும் வசதி இருக்கிறது, ரிஜிஸ்டரி பிரச்சினைகளை தானகவே சரி செய்துவிடும், இனைய இனைப்பின் வேகத்தை கொஞ்சம் வேகப்படுத்தி தரும், ஏதாவது கேம்ஸ் விளையாடியானல் அதற்கென ஒரு பூஸ்டர் இருக்கிறது ஆனால் அது விலை கொடுத்து வாங்கவேண்டும் அதனால் அதை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற வசதிகளை பயன்படுத்தி பாருங்கள்.







    நண்பர்களே மென்பொருள் பயனுள்ளதாக இருப்பின் Advance System Care தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    நீங்கள் என் பழைய பதிவுகளுக்கும் எளிதாக வாக்களிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். நம் தளத்தின் வலது பக்க மேல் மூலையில் பாருங்கள் Subscribe என்பதன் கீழ் இருக்கும் ஆறு ஐகான்களில் முதலாவதாக இருக்கும் இண்டிலி ஐகானை கிளிக்குவதன் மூலமாக நான் இண்டியில் இனைத்திருக்கும் அனைத்து பதிவுகளையும் எளிதாக ஓரே இடத்தில் காணலாம் இதன் வழியாக நீங்கள் வாக்களிக்க விரும்பும் பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க் முடியும்
    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 16, 2010

    24

    கீபோர்ட் பவர் பட்டன் டிசாபிள் (Keyboard Power Button Disable)

  • Nov 16, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நாணல் வளைந்து கொடுப்பதால் அதற்கு பலமில்லை என்று அர்த்தமில்லை.

    வணக்கம் நண்பர்களே கணினியை உபயோகிக்க எத்தனையோ விதமான ஷார்ட்கட் கீகள் இருக்கின்றன ஆனாலும் கீபோர்டை தவிர்க்க முடியாது நாம் பார்க்க போவது இந்த கீபோர்டில் இருக்கும் பவர் கீயை எப்படி இயங்கவிடாமல் செய்வது என்பதை பற்றித்தான்.

    பொதுவாக இந்த பட்டன் எல்லா கீபோர்டுகளிலும் காணப்படுவதில்லை ஆனால் இந்த வகையான கீபோர்டு இருப்பவர்கள் நிச்சியமாக ஏதாவது தட்டச்சு செய்யும் நேரத்தில் தவறுதலாக செய்துவிட்டால் அதை அழிப்பதற்கு Backspace பயன்படுத்துவார்கள் ஆனால் அந்த நேரத்தில் கொஞ்சம் கவணக்குறைவாக அதன் அருகிலேயே இருக்கும் Power கீயை அழுத்தினால் போதும் கணினி ஷட் டவுன் ஆகிவிடும் இந்த நேரத்தில் நீங்கள் திறந்து வைத்திருந்த பைல் ஆட்டோ சேவ் வசதியோ அல்லது நீங்களாகவோ சேமித்திருக்க விட்டால் நீங்கள் தட்டச்சு செய்த அத்தனையும் காணமல் போய்விட வாய்ப்பு உண்டு. இந்த வகையிலான கீபோர்ட் பயன்படுத்துபவர்கள் நிச்சியமாக பிரச்சினையை சந்தித்திருப்பார்கள் அதற்கு தீர்வுதான் இந்த பதிவு.



    இனி நீங்கள் செய்ய வேண்டியது Start -> Settings -> Control Panel சென்று அங்கிருக்கும் Power Options என்பதை இருமுறை கிளிக்கி அல்லது வலது கிளிக் செய்து திறந்து அதில் Advanced டேப் திறக்கவும் இப்போது When I press the power button on my computer என்பதன் கீழ் இருக்கும் கோம்போவை திறந்து அதில் Do nothing என்பதை தெரிவு செய்து Apply கொடுத்து Ok கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் வேகமாக தட்டச்சு செய்யும் போது தவறி பவர் பட்டனில் விரல் அழுத்தினாலும் பிரச்சினையில்லை.



    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 15, 2010

    15

    கீபோர்ட் கீயை தேவைக்கேற்றார் போல இடம் மாற்றலாம்

  • Nov 15, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்கவிட்டால் கண்ணுக்கே தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்.

    வணக்கம் நண்பர்களே சில நாட்களாக கணினி சம்பந்த பதிவுகளை எழுதாமல் இருந்தேன் அதற்கான காரணம் வேறொன்றுமில்லை இடையில் சில நண்பர்களின் கருத்துரைகளுக்கு சந்தேகங்களுக்கு பதிலாக பதிவை எழுதிக்கொண்டிருந்தேன். நாம் இந்த பதிவில் பார்க்க போவது நாம் உப்யோகிக்கும் கணினியின் கீபோர்ட் கீயை நமக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றித்தான் இதன் உதவி அதிகமாக மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம் அல்லாத கணினி பாவனையார்களுக்கும் சில நேரங்களில் தேவைப்படும்.

    இந்த வழிமுறைகளை செய்வதற்கென்றே இரண்டு மென்பொருள்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக Map Keyboard என்பதை பற்றி பார்க்கலாம் Map Keyboard தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாகவே இயக்கலாம் இனி கீயை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை படத்தை பாருங்கள் எந்த கீயை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த கீயை செலக்ட் செய்யுங்கள், செய்ததும் கீழிருக்கும் Remap selected key to என்பதன் அருகில் இருக்கும் கோம்போ பாக்ஸை கிளிக்கி வேண்டிய கீயை தெரிவு செய்து ஓக்கே கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்.



    இனி அடுத்ததாக பார்க்க போவது Key Tweak இதை தரவிறக்கம் செய்தபின் உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். கணினியில் நிறுவ ஓரிரு நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்வதில்லை. நிறுவல் முடிந்ததும் மென்பொருளை இயக்க தொடங்கினால் கீழிருக்கும் படம் போல திறக்கும் இதன் வழியாக நீஙக்ள் ஒரு கீயை வேறொரு கீயாக மாற்றலாம் வேண்டுமானால் அதை மொத்தமாக முடக்கி விடலாம் சரி பிறிதொரு நேரத்தில் செட்டிங்ஸ் மாற்ற நினைத்தால் மீண்டும் டிபால்ட் செட்டிங்கஸ் கொண்டு வரும் வழியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள்.



    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Nov 14, 2010

    15

    தமிழில் மருத்துவ தளங்கள் II

  • Nov 14, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

    வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே தமிழில் மருத்துவ தளங்கள் I என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே எனக்கு தெரிந்த தளங்கள் இவையெனவும் இதைப்போல வேறு மருத்துவ தளங்கள் இருந்தால் தெரியப்படுத்த சொல்லியிருந்தேன் சமீபத்தில் என்னுடைய பதிவில் இருவர் சில மருத்துவ தளங்களை சுட்டிக்காட்டியிருந்தனர் பின்வருமாறு.

    நீச்சல்காரன் said...

    http://siddhavaithiyan.blogspot.com/
    http://abidheva.blogspot.com/

    Please add it to your list


    eegarai said...

    தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். படிப்பவர்கள் தமிழில் உள்ள மருத்துவ தளங்களே மொத்தம் நான்குதான் என்று நினைத்துவிடப் போகிறார்கள்! கூகிளில் ’மருத்துவம்’ எனத் தேடிப்பாருங்கள். எவ்வளவு தளங்கள் உள்ளன என்பது தெரியும்!

    “என் நண்பர்களின் மருத்துவத் தளங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானதாகும்!


    பழைய பதிவிலேயே அப்டேட் செய்தால் புதிதாய் வருபவர்களுக்கு தெரிவதில்லை அதே நேரத்தில் பழைய வருகையாளர்களுக்கும் நாம் தான் இதை முன்னே பார்த்துவிட்டோ என்கிற நினைப்பில் கவணிக்காமல் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது அதனால் தான் இதை தமிழில் மருத்துவ தளங்கள் II என எழுதுகிறேன். இனி வருங்காலத்தில் நம் தளத்தின் முகப்பிலேயே இருக்கும் தமிழில் மருத்துவம் என்பதை தெரிவு செய்தால் இனி வரும் அப்டேட் பதிவுகளை எளிதாக நீங்கள் படிக்க முடியும்.

    மதிப்பிற்குறிய ஈகரை தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம், யோகா, சித்த மருத்துவம், பாலியல் சம்பந்த மான பிரச்சினைகள் சம்பந்தமான எல்லா தகவல்களை பதிகிறார்கள் அங்கு இதற்கெனெ ஒரு போரமாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் சந்தேகத்தை அங்கு கேள்வியாக கேட்கலாம் தள நிர்வாகிகளும் பதில் அளிக்கிறார்கள் அல்லாமல் நம்மை போன்ற நண்பர்களும் அனுபவத்தில் பதிலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லாம் தமிழிலேயே இருப்பதால் நம்மால் கேள்வியை எளிதாக கேட்க முடியும் பதிலையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    ஈகரை தளம் செல்ல படத்தை கிளிக்கவும்




    அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.தேவன் மாயம் அவர்களின் தளத்தில் பொது மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம், மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தளத்தில் மருத்துவம் என்றல்லாது பிற தகவல்களையும் பதிகிறார்கள் ஆனால் மருத்துவத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நினைகிறேன். தளத்தை படித்து பாருங்கள் பயனுள்ளதென நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.தேவன் மாயம் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.கண்ணன் அவர்களின் தளத்தில் சிறு நீரக பிரச்சினை குறித்த தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவரிடம் கேட்கும் வசதி இல்லையென்றே நினைக்கிறேன் ஆனால் அதே நேரத்தில் மின்னஞ்சல் தொடர்பு வசதி கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்களா என்பதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை இருந்தாலும் சிறு நீரக பிரச்சினை குறித்தான தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள தளம் உதவியாய் இருக்குமென்றே நம்புகிறேன். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.கண்ணன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.குருசாமி சிவராமன் சித்த மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்கள் மிக சமீபத்தில் தான் எழுத தொடங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன் சித்த மருத்துவ தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் படித்து பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.குருசாமி சிவராமன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர